‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

நேரம், அதைத் தொடர்ந்து பிரேமம் என இரண்டு படங்களிலேயே மலையாள திரை உலகை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதன்பின் ஏழு வருடங்கள் படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், கடந்த வருடம் நயன்தாரா, பிரித்விராஜை வைத்து கோல்ட் படத்தை இயக்கினார். இந்தபடம் தோல்வி அடைந்தது.
தற்போது நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அல்போன்ஸ். இந்த நிலையில் திடீரென சினிமாவை விட்டு தான் விலகப்போவதாகவும் தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதை கண்டறிந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், சினிமாவிலேயே வேறு ஏதாவது ஒரு தளத்தில் இயன்றவரை பணியாற்ற இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார். ரசிகர்களும் பல பிரபலங்களும் இவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி தொடர்ந்து உற்சாகம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்காக ஒரு பாடலை தயார் செய்து வைத்திருந்தார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் அந்த பாடலை அவரால் கமலிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. அதை தொடர்ந்து என்னால் இந்த பாடலை கமலிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்று கூறி நடிகர் பார்த்திபனுக்கு அனுப்பி வைத்தார். பார்த்திபன் அந்த பாடலை கமலுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த பாடலை கேட்டுவிட்டு கமல் வெளியிட்டுள்ள ஆடியோவில், “அல்போன்ஸ் புத்ரன் அவரது உடம்பு சுகம் இல்லை என்று சொன்னாலும் கூட மனசு நல்லா இருக்குது. குரல் வேறு சந்தோஷமாக இருக்கிறது. அப்படியே சந்தோஷமாக இருக்கட்டும். அவர் எடுக்கும் முடிவு கூட அவருடையது என்றாலும் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். டேக் கேர் அல்போன்ஸ் புத்ரன்” என்று கூறியுள்ளார்.