ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் தீபாவளியையொட்டி வெளிவந்தது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் தீபாவளி படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தை தனது வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்த்து ரசித்த ரஜினி, படக் குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் எழுதியிருப்பதாவது: 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்பராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்சால் இப்படியும் நடிக்க முடியுமா? என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.
திருவின் கேமரா விளையாடியிருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்துக்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்து இருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுக்கள்.
படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டாணியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம். இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். நான் பெருமைப்படுகிறேன். எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




