Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுதா இயக்கத்தில் ‛சூர்யா 43' அறிவிப்பு வந்தாச்சு : ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா கதைக்களம்...?

26 அக், 2023 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Sudha-directed-Suriya-43-announced:-Is-the-plot-an-anti-Hindi-protest?

சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போகிறார். சூர்யாவின் 43வது படமாக உருவாகும் இதில் நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவியின் 100வது படமாகும். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சூரரைப்போற்று படத்திற்கு பின் சூர்யா, சுதா, ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும்.



இப்படம் பற்றிய அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர்கள் போராட்டம், போலீசார் அவர்களை அடக்குவது, துப்பாக்கிச்சூடு போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும் புறநானுறு என குறிப்பிட்டு மேலே இரண்டு விஷயங்களை லேபிள் போட்டு மறைத்துள்ளனர்.

1965ல் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி இந்த படம் உருவாக போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களும் அவ்வாறே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். படம் முழுக்க இந்த விஷயம் வரப்போகிறதா அல்லது அதை மையமாக வைத்து நடப்புகால அரசியல் சம்பவங்களையும் வைத்து இந்த படம் உருவாக போகிறதா என அடுத்தடுத்த அப்டேட்டுகளில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அசத்தும் அழகு : வசீகரிக்கும் மாளவிகா மோகனன்அசத்தும் அழகு : வசீகரிக்கும் மாளவிகா ... ஆரம்பிக்கலாங்களா... : கமல் 234 - நவ., 7 முதல் கொண்டாட்டம் துவங்குகிறது ஆரம்பிக்கலாங்களா... : கமல் 234 - நவ., 7 முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in