டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது ஆண்டு பேரவைக் கூட்டம் வரும் செப்., 10 ம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் தலைவர் நாசர் தலைமையில் நடக்கிறது. நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




