செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
திலீப் தற்பொழுது மலையாளத்தில் தான் நடித்து வரும் படங்களில் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளை தனக்கு ஜோடி சேர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நடித்து முடித்துள்ள பாந்த்ரா என்கிற படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரையுலகில் நுழைந்துள்ளார் தமன்னா. இதனை அடுத்து தற்போது திலீப் கதாநாயகனாக நடிக்கும் தங்கமணி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரணிதா சுபாஷ்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் நிறைவடைந்து விட்டது. இதற்காக இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகில் 2 1/2 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய செட் ஒன்று அமைத்து பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 1986ல் தங்கமணி என்கிற கிராமத்தில் பஸ் போக்குவரத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை மற்றும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகி உள்ளது. உடல் என்கிற விருது பெற்ற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய வேடங்களில் ஜான் விஜய், அஜ்மல் அமீர், மனோஜ் கே ஜெயன், மேஜர் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.