Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'குஷி' டிரைலரைப் பார்த்து தியேட்டரை விட்டு வெளியேறிய நாக சைதன்யா

28 ஆக, 2023 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Naga-Chaitanya-leaving-the-theater-after-watching-the-trailer-of-Kushi

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. அவருடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளிலேயே பிரிந்தார்.

சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள 'குஷி' படம் இந்த வாரம் வெளிவர உள்ளது. கடந்த வாரம் தெலுங்கில் வெளியான 'பாய்ஸ் ஹாஸ்டல்' என்ற படத்தின் சிறப்புக் காட்சி ஒன்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு படத்தைப் பார்த்தார் நாக சைதன்யா. இடைவேளையின் போது தியேட்டரில் சமந்தா நடித்துள்ள 'குஷி' படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.

நாக சைதன்யா தியேட்டரில் இருந்த நிலையில் அந்த டிரைலர் திரையிடப்பட்டது. வேறு வழியில்லாமல் டிரைலரைப் பார்த்த நாக சைதன்யா, அதன்பின் 'பாய்ஸ் ஹாஸ்டல்' படத்தை முழுவதுமாகப் பார்க்காமல் பாதியிலேயே போய்விட்டாராம். 'குஷி' படத்தில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக நடித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிவுக்குப் பின் சமந்தாவும், நாக சைதன்யாவும் மற்றவரது படங்களைப் பற்றி எந்த இடத்திலும் பேசிக் கொள்வதில்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹெல்மெட் அவசியம் : புல்லட் ஓட்டி வழிப்புணர்வு ஏற்படுத்திய தன்யா ஹோப்ஹெல்மெட் அவசியம் : புல்லட் ஓட்டி ... வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம் : சகோதரர் காலமானார் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

R Ravikumar - chennai ,இந்தியா
29 ஆக, 2023 - 09:05 Report Abuse
R Ravikumar ஒரு முன்னாள் கணவனாக இது சற்று வலி தரும் விஷயம். நடிப்பாக இருந்தாலும் கூட. சமந்தா சற்று விட்டு கொடுத்து போய் இருந்திருக்கலாம். 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தர தயாராக இருந்தார் என்று கேள்வி. இதற்கு பிறகும் சமந்தா அவரது காதலை / குடும்பத்தை காப்பாற்றி கொண்டிருக்கலாம் , விட்டு விட்டார் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in