Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிங் ஆப் கொத்தா ; முகத்தை மறைத்தபடி முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனிகா

27 ஆக, 2023 - 11:51 IST
எழுத்தின் அளவு:
King-of-Kotha;-Anika-who-saw-the-movie-with-hiding-her-face

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய அஜித் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா சுரேந்திரன். தற்போது இளம்பெண்ணாக வளர்ந்து விட்ட அவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் இன்னும் சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள 'கிங் ஆப் கொத்தா' திரைப்படத்தில் துல்கர் சல்மானின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் யாரும் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிட முடியாதபடி முகத்தில் மாஸ்க் அணிந்து இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்து ரசித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் நான் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் முதல் படம். தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த படத்தைப் பார்க்கும்போது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன் என்றாலும் ஒரு மிகப்பெரிய படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் அனிகா சுரேந்திரன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது ; அன்றே கணித்த ராஷ்மிகாஅல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது ; ... செப்டம்பர் 7ல் இருந்து லண்டனில் விஜய்யின் லியோ டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்! செப்டம்பர் 7ல் இருந்து லண்டனில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)