சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛குஷி'. காதலர்கள் திருமணத்திற்கு பின் இல்வாழ்க்கையில் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை கூறும் படமாக உருவாகி உள்ளது. தெலுங்கு, தமிழில் செப்., 1ம் தேதி வெளியாகிறது. இப்படம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டி...
அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்கள் உங்களுக்கு மிகப்பெரிய திருப்பம் கொடுத்தது. அதுபற்றி...?
இரண்டுமே நல்ல படங்கள். ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதுமாதிரி பல படங்கள் பண்ண ஆசை.
எப்போது நேரடி தமிழ் படம் நடிப்பீங்க...?
2 தமிழ் இயக்குனர்களிடம் பேசி உள்ளேன். அடுத்து எந்த மொழியில் பண்ண போறேன் என்று தெரியவில்லை. குஷி ரிலீஸிற்கு பின் இரண்டு, மூன்று படங்கள் உள்ளன. அதன்பின் தமிழ் இயக்குனர்களுடன் வேலை பார்ப்பேன்.
குஷி படத்தில் சமந்தாவுடன் நடித்த திருமணக்காட்சி பார்த்து பெற்றோர் என்ன சொன்னாங்க, எப்போ உங்களுக்கு திருமணம்...?
எங்களுக்கு வயசு ஆகுது... எப்போ திருமணம் செய்ய போற என என் பெற்றோரும் திருமணம் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கும் ஆசை தான். ஆனால் உடனே இல்லை. எப்போது திருமணம் செய்ய வேண்டும் என நான் தான் முடிவு எடுக்கணும். என் உறவினர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் அவர்கள் என் திருமணத்தை வைத்து கொண்டாட பார்க்கிறார்கள். இப்போதைக்கு என் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. அப்பா - அம்மாவிற்கு 60ம் கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன். அவர்களும் சந்தோஷப்படுவார்கள்.
இவ்வாறு கூறினார்.




