இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! |
தமிழில் ரஜினிகாந்த் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து வந்தாரோ, அதே போல தெலுங்கில் மெகா ஸ்டார் ஆக உயர்ந்து வந்தவர் சிரஞ்சீவி. இருவரது வளர்ச்சியும் ஒரே கால கட்டத்தில்தான் அமைந்தது. இருப்பினும் வசூல் விஷயத்தில் சிரஞ்சீவியை எப்போதுமே மிஞ்சுபவர் ரஜினிகாந்த்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்கிறது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளிவந்து அது தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கு மட்டும் இதுவரையிலும் சுமார் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரையிலும் 35 கோடி ரூபாயை பங்குத் தொகையாகக் கொடுத்து இரு மடங்கு லாபத்தைத் தந்துள்ளது.
அதே சமயம் சிரஞ்சீவி நடித்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த 'போலா ஷங்கர்' படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்தப் படத்தின் உலக அளவிலான மொத்த வசூலே 45 கோடியைத் தாண்டவில்லையாம். உலக அளவில் சுமார் 80 கோடிக்கு விற்பனையான இப்படம் மூலம் 50 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.
அடுத்தடுத்து நஷ்டங்களை சந்தித்த போதும் சிரஞ்சீவி தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படமான 157 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பிம்பிசாரா' படத்தை இயக்கிய வசிஷ்டா அந்தப் படத்தை இயக்க உள்ளார்.