சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து சில வருடங்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்து அடங்கியது. அதன்பின் இந்த வருடத் துவக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படத்தின் போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சிலர் பேச மீண்டும் சர்ச்சை வெடித்தது.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், “கழுகு, காக்கா” கதை சொல்லி 'சூப்பர் ஸ்டார்' பற்றியும் பேசி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும் விஜய் ரசிகர்கள் அது பற்றிய சர்ச்சைகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.
இந்நிலையில் 'ஜெயிலர்' படம் வெளியாகி 11 நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்து தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 500 கோடி ரூபாய் வசூலை '2.0' படம் மூலம் முதலில் படைத்தது ரஜினிகாந்த் தான். மீண்டும் இப்போது இரண்டாவது 500 கோடி வசூலைக் கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த்தை விடவும் தங்களை அதிக வியாபாரம் செய்யும் நடிகர்கள் என சொல்லிக் கொள்ளும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள், இனி 'சூப்பர் ஸ்டார்' பட்டம் பற்றி பேசக் கூடாது என ரஜினி ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கடுமையாகப் பதிவிட்டு வருகிறார்கள்.




