திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' |
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் ஆகிய படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். நீண்ட வருடங்கள் கழித்து ' கருமேகங்கள் கலைகின்றன' என புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்டோர் பலர் இணைந்து நடித்துள்ளனர். ரியோடா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சமீபத்தில் இப்படத்திற்கு சென்சாரில் 'யு ' சான்றிதழ் அளித்தனர். இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.