'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் |
ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகி நீண்ட மாதங்களாக திரைக்கு வர காத்திருக்கும் படம் 'சப்தம்'. இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
சப்தத்தை வைத்து வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என அறிவித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில் ஏதோ ஒரு சில காரணங்களால் அப்போது திரைக்கு வரவில்லை. இப்போது சப்தம் திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என புதிய ரிலீஸ் தேதியுடன் அறிவித்துள்ளனர்.