சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படமாக 'வீர தீர சூரன்' 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வென்ஜாரா, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இப்படம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து இந்த படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி (நாளை) வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.