வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
ராயன் படத்திற்கு பிறகு இயக்குனராக தனுஷ் மூன்றாம் படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கோல்டன் ஸ்பரோ பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே 2025, பிப்ரவரி வெளியீடு என கூறப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 7ம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.