Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லியோ' தமிழக வியாபாரம் : ரூ.100 கோடி 'டார்கெட்'

07 ஆக, 2023 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Leo-Tamil-Nadu-Business-is-Rs.100-Crore-Target

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையைத் தவிர மற்ற மாநில வெளியீட்டு உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் வியாபாரம் ஏற்கெனவே முடிவடைந்திருந்தது.

தமிழக வெளியீட்டு உரிமைக்கான பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே வந்தது. தற்போது ஒரு சில ஏரியாக்களின் உரிமை மட்டும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எஞ்சியுள்ள ஏரியாக்களின் விற்பனைக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது என்கிறார்கள்.

விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான 'வாரிசு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை சுமார் 60 கோடி வரை விற்கப்பட்டது. படத்திற்கான 'ஷேர்' தொகையாக 73 கோடி ரூபாய் வரை கிடைத்தது. அதனுடன் ஒப்பிடும் போது 'லியோ' தமிழக வெளியீட்டு உரிமைக்கான விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். சுமார் 100 கோடி வரை வியாபாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் முந்தைய பட வியாபார விலையை 'லியோ' முறியடிப்பதோடு வசூலையும் முறியடிக்கும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'வேதாளம்'  ரீமேக்கில் நடித்தது ஏன்? - சிரஞ்சீவி விளக்கம்'வேதாளம்' ரீமேக்கில் நடித்தது ஏன்? ... தமிழில் 'அண்ணாத்த'யைக் காப்பாற்றாத 'தங்கை' கீர்த்தி சுரேஷ் : தெலுங்கு 'ஷங்கர்' ஐ காப்பாற்றுவாரா ? தமிழில் 'அண்ணாத்த'யைக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

angbu ganesh - chennai,இந்தியா
07 ஆக, 2023 - 14:15 Report Abuse
angbu ganesh kakkaku vada mela romba aasa
Rate this:
mohan - chennai,இந்தியா
07 ஆக, 2023 - 17:50Report Abuse
mohanஅசிங்கப்பட்டான் காக்ககஆ ரசிகன்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in