இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தவர் எம்எஸ் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது சினிமா தயாரிப்பில் இவரது கவனம் திரும்பியுள்ளது. இவரது மனைவி சாக்ஷி தற்போது படத்தயாரிப்பில் இறங்கி தமிழில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்) என்கிற படத்தை தயாரித்துள்ளார். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி, இசையமைத்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண், கதாநாயகியாக லவ் டுடே புகழ் இவானா ஆகியோர் நடித்துள்ளனர். நதியா மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளரான சாக்ஷி தோனி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவரிடம் அடுத்ததாக பிரபாஸ், பவன் கல்யாண் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாக்ஷி, “இப்போதுதான் நான் கிரவுண்டிலேயே இறங்கி இருக்கிறேன். இனி பவுண்டேஷன் ஸ்ட்ராங்காக போட வேண்டும். பவன் கல்யாண், பிரபாஸ் ஆகியோரின் படங்களை தயாரிக்க மிக்ப்பெரிய அளவில் செலவாகும். அந்த அளவிற்கு இப்போது வசதி இல்லை” என்று கூறியுள்ளார்.