சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தெலுங்கில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கடு, சைனிக்கூடு என மகேஷ்பாபுவை வைத்து கமர்ஷியல் படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் குணசேகர். சமீபகாலமாக அவரது கவனம் புராண மற்றும் வரலாற்று படங்கள் பக்கம் திரும்பியது. கடந்த 2015ல் அனுஷ்கா கதாநாயகியாக நடித்த ருத்ரமாதேவி என்கிற படத்தை இயக்கினார். பாகுபலி வில்லனான ராணாவை இந்த படத்தில் கதாநாயகனாக மாற்றினார். அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது இயக்கத்தில் புராண கதையான சாகுந்தலம் என்கிற படம் வெளியானது. அந்த படமும் அவருக்கு தோல்வியையே பரிசளித்தது.
மீண்டும் சமூக, கமர்சியல் படங்களின் பக்கம் இயக்குனர் குணசேகர் கவனத்தை திருப்புவார் என பார்த்தால் மீண்டும் ஹிரண்ய கசிபுவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி புராண படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார் குணசேகர்.. இதற்காக கிட்டத்தட்ட நாலு வருடங்கள் முன்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் குணசேகர். இதிலும் கதாநாயகனாக ராணா நடிப்பதாகத்தான் இருந்தது. பலமுறை இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பின் அப்படியே கிடப்பில் போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராணா இதே ஹிரண்ய கசிபு கதையில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது குணசேகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதை தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் குணசேகர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் கதையை கடவுளை வைத்து உருவாக்கும்போது, கடவுள் உங்களுடைய நேர்மையின் மீதும் ஒரு கண் வைத்து இருக்கிறார் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.. நெறிமுறைக்கு மாறான செயல்கள் நெறிமுறையால் பதிலளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இது நடிகர் ராணாவின் மீதான அவரது கோபத்தின் வெளிப்பாடுதான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.




