நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் மின்னல் முரளி என்கிற படத்தில் இயக்குனராகவும் ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்கிற படத்தின் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் இயக்குனர் பஷில் ஜோசப். இவர் முதன்முதலாக இயக்கிய நகைச்சுவை திரைப்படம் குஞ்சி ராமாயணம். இந்த படத்திற்கு கதை எழுதியவர் கதாசிரியர் தீபு பிரதீப். இந்த நிலையில் தீபு பிரதீப் கதையில் தற்போது உருவாகியுள்ள படம் பத்மினி. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி மற்றும் மடோனா செபாஸ்டியன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் சென்னா ஹெக்டே என்பவர் இயக்கியுள்ளார். குஞ்சி ராமாயணம் படம் போல இதுவும் இன்னொரு கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படம் வரும் ஜூலை 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் நாயகியான அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.