தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
அனிருத்தின் லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சி தற்போது இந்தியாவின் பல நகரங்களில் சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி கொச்சியில் தனது லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சியை நடத்தினார் அனிருத். இந்த நிகழ்ச்சியில் முதல் பாடலாக அவர் 'தட்டற தட்டற' என்கிற பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார். இந்த நிகழ்வில் தன் அருகில் இருந்த இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் உடன் கலந்துகொண்டு பார்வையாளர் பிரிவில் இருந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்த பாடலை கேட்டதும் உற்சாக துள்ளலுடன் ஆட ஆரம்பித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
கல்யாணியின் கொண்டாட்டத்திற்கு காரணமும் இருக்கிறது. மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் தான் இந்த பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலுக்கு ஹிருதயம் புகழ் இசை அமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். விரைவில் வெளிவர தயாராகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்கி உள்ளார்.
தனது பட பாடலை அனிருத் தனது நிகழ்ச்சியின் முதல் பாடலாக பாடியது தான் கல்யாணி பிரியதர்ஷன் உற்சாக கொண்டாட்டத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.