
ஜுன் 23ல் 6 படங்களின் போட்டி
இந்த வாரம் ஜுன் 23ம் தேதி, “அழகிய கண்ணே, அஸ்வின்ஸ், நாயாட்டி, ரெஜினா, தண்டட்டி, பாயும் ஒளி நீ எனக்கு,” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு கமல்ஹாசன் நடித்த பழைய படமான "வேட்டையாடு விளையாடு" படமும் ரீ-ரிலீசாகிறது. இப்படம் தவிர மற்ற படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். கடந்த வாரம் வெளியான படங்களுக்கே வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்த வாரம் அவற்றிற்குத் தகுந்த அளவில் தியேட்டர்கள் கிடைத்து அவை வெளிவந்து ரசிகர்களை எப்படி கவரப் போகிறது என்பது சவால்தான்.
தயாரிப்பாளர் சங்கம் இரு தினங்களுக்கு முன்பு நடத்திய பொதுக்குழுவில் பல தீர்மானங்களை நிறைவேற்றியது. அது போல ஒவ்வொரு வாரமும் இப்படி அதிகப் படங்கள் வருவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சிறிய தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பல படங்களுக்கு தமிழகம் முழுவதுமே 50 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!