டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை என தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் ரெஜினா. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛என் தனிப்பட்டட வாழ்க்கையை நான் மறைத்தது இல்லை. கடந்த காலங்களில் பலருடன் ரிலேசன்ஷிப்பில் நான் இருந்தது உண்மை தான். ஒரு வரியில் சொல்வது என்றால் நான் ஒரு சீரியல் டேட்டர். தற்போது அதிலிருந்து சற்று விலகி உள்ளேன். இப்படி வெளிப்படையாக பேசுவதால் நிறைய விமர்சனங்கள் வரும். ஆனால் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை'' என்றார்.
ரெஜினாவின் இந்த ஓபன் ஸ்டேட்மென்ட்டை சமூகவலைதளத்தில் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.