பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' படம் காதலர்களிடையேயான மொபைல் போன் பரிமாற்றத்தின் விளைவுகளை கையாண்ட நிலையில், திருமணமான தம்பதியினரிடையே கைபேசி பரிமாற்றத்தால் ஏற்படும் சிக்கல்களை பற்றி பேசும் படம் 'ரிங் ரிங்'. திருமணத்திற்குப் பிந்தைய பிரச்சினைகளை நகைச்சுவையாக சொல்லும் படம். சக்திவேல் எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், சஹானா ஷெட்டி, டேனியல் ஆன் போப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'மூவி சூப்பர் பேன்ஸ்' என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது. வருகிற ஜூலை 5ம் தேதி படம் வெளியாகிறது. "ஓடிடி துறையில் ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். புதிய திறமைகள் மற்றும் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கமாகும். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் 'ரிங் ரிங்' கவரும்" என்கிறார் ஓடிடி உரிமையாளர் ராஜேஷ் கண்ணா.