மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‛லால் சலாம்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விக்ரமை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், அதன் பிறகு கதை கேட்டு பிடித்து, நடிக்க யோசித்து வந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக தருவதாகவும் தெரிவித்துள்ளது. இப்போது இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். சம்பளம் மட்டுமல்ல, படத்தில் அவரது கேரக்டரும் வலுவாக உள்ளதாம். அதனால் விக்ரம் ஒப்புக் கொள்வார் என்கிறார்கள். விரைவில் அவர் சம்மதம் சொன்னதோடு செய்தியோடு அறிவிப்பு வெளியாகலாம்.