தமிழில் சசிகுமார் நடித்த 'பிரம்மன்' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் சில பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் அடுத்து 'மாயவன்' படத்தில் நடித்தவர் தற்போது 'தணல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அவருக்கும் தெலுங்கு நடிகரான வருண் தேஜுக்கும் அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'மிஸ்டர்' என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது காதலிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகன். வருண் தேஜின் சகோதரி நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
வருண் தேஜ், லாவண்யா திரிபாதி காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் சொல்லிவிட்டார்களாம். அதனால், அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடத்தி இந்த வருடத்திற்குள் திருமணத்தையும் நடத்த உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.