தனுஷ், பி.எஸ்.மித்ரன் புதிய கூட்டணி? | ப்ரீ புக்கிங்கில் 40 லட்சம் வசூலித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சல்மான்கானின் 'மாத்ருபூமி' | அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் 2வது இடம் பிடித்த வரலட்சுமியின் 'எஸ்.சரஸ்வதி' | 'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் வெளியானது! | வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன் : கவுதம் ராம் கார்த்திக் ஓப்பன் டாக் | பிளாஷ்பேக் : தமிழில் தாக்குப்பிடிக்க முடியாத சுதா ராணி | பிளாஷ்பேக் : திரைப்படமான முதல் சமூக தொடர்கதை | நடிகர்கள் பின்னால் இளைஞர்கள்... : ஜாக்கிரதையாக இருக்க சொன்ன ரஜினி | பாராட்டினார் விஜய்சேதுபதி: பீல் பண்ணுகிறார் வீஜே பார்வதி |

2023ம் ஆண்டில் அதிக வசூலைப் பெறும் படங்களில் ஒன்றாக 'பொன்னியின் செல்வன் 2' இருக்கப் போகிறது என்பது உறுதி. அதே சமயம் இனி வரப் போகும் சில பெரிய படங்கள் செய்யப் போகும் வசூலை விடவும் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கப் போகிறதா என்பதே இப்போதைய கேள்வி.
நான்கு நாள் வசூலிலேயே 200 கோடி வசூலைக் கடந்த 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வசூல் தற்போது அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் வசூலை முறியடித்துவிட்டது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் விஜய்யின் 'வாரிசு' பட வசூலை மிஞ்ச வேண்டும். அந்த 300 கோடி வசூலை இந்த வார இறுதிக்குள் 'பொன்னியின் செல்வன் 2' கடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதன் மூலம் தென்னிந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இப்படம் முதலிடத்தை நோக்கி முன்னேறும். இந்த ஆண்டில் இதற்கடுத்து வர உள்ள படங்களில் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படம்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். அந்தப் படம் வசூலிக்கப் போவதை விடவும் அதிக வசூலைப் பெற்று 'பொன்னியின் செல்வன் 2' உச்சத்திற்கு செல்லுமா என்பது இனி வரும் நாட்களில்தான் தெரியும்.