மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழில் இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது கார்த்தியை வைத்து 'சர்தார் 2' படத்தை உருவாக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. அதில் பிஸியாக மித்ரன் உள்ளார். இந்த படத்திற்கு பின் மித்ரன் தெலுங்கு ஹீரோவை வைத்து படம் இயக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வந்தது.
இந்நிலையில் தனுஷிற்கு ஒரு கதை கூறியுள்ளார். தனுஷிற்கும் கதை பிடித்துள்ளதாம். தற்போது தனுஷ் கைவசம் அடுத்தடுத்து சில படங்கள் உள்ளன. அதனால் அதற்கு தகுந்தபடி இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டு வருகிறார். அதற்குள் மித்ரனும் தெலுங்கு ஹீரோவிற்கு படம் பண்ணிவிட்டு வருவார் என கூறப்படுகிறது. தற்போது படம் ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் தயாரிப்பாளர் உள்ளிட்ட விஷயங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளதாம்.