Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் 2வது இடம் பிடித்த வரலட்சுமியின் 'எஸ்.சரஸ்வதி'

08 ஏப், 2026 - 04:58 IST
எழுத்தின் அளவு:
Varalaxmis-S-Saraswathi-Trends-at-No.-2-on-Prime-Video
Advertisement


தெலுங்கில் வரலட்சுமி சரத்குமார் இயக்கி தயாரித்து கதையின் நாயகியாக நடித்து கடந்த மார்ச் 6ம் தேதி திரைக்கு வந்த படம் 'எஸ்.சரஸ்வதி'. க்ரைம் திரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் அவருடன் பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். ஆனால், இந்த படம் தியேட்டரில் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், ஏப்ரல் மூன்றாம் தேதி இந்த எஸ்.சரஸ்வதி படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட்டார்கள். அதையடுத்து இந்தியா முழுவதும் இந்த படம் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தாத இந்த படம் இல்லத்தரசிகளின் சிறப்பான வரவேற்பை பெற்று இருக்கிறது.

தன் குழந்தையை பாதுகாக்க அதீத முயற்சிகளுக்கு தள்ளப்படும் ஒரு தாயின் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. உணர்ச்சி ஆழம் சஸ்பென்ஸ் நிறைந்த கதைகளும் இரண்டாவது பாதியில் பல திருப்பங்களை கொண்ட இந்த படம் ஓடிடி பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து வருவதால் உற்சாகம் அடைந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'திரையரங்குகளில் ஏற்பட்ட பின்னடைவு மனச்சோர்வை ஏற்படுத்தினாலும், ஓடிடியில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது. இது ஒரு இயக்குனராக எனது திறமைக்கு கிடைத்த நல்ல அங்கீகாரம் ஆகும்' என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் வெளியானது!'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள ... ப்ரீ புக்கிங்கில் 40 லட்சம் வசூலித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ப்ரீ புக்கிங்கில் 40 லட்சம் வசூலித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap