Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : தமிழில் தாக்குப்பிடிக்க முடியாத சுதா ராணி

08 ஏப், 2026 - 03:08 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-irresistible-Sudha-Rani-in-Tamil
Advertisement

150க்கும் மேற்றபட்ட படங்களில் நடித்த சுதா ராணியை தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக அறியமாட்டார்கள். காரணம் அவர் தமிழில் ஒரு சில படங்களில்தான் நடித்தார். கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கன்னட நடிகைகள் தமிழில் சாதித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் தாக்குப்பிடிக்க முடியாமல் கன்னடத்திற்கே திரும்பி சென்றவர் சுதா ராணி.

குழந்தை நட்சத்திரமாக, 'கில்லாடி கிட்டு' (1978) என்ற படத்தில் அறிமுமான சுதா ராணி அதன்பிறகு, 'குல்லா குல்லி' (1980), 'அனுபமா' (1981), 'பாக்யவந்தா' மற்றும் 'ரங்கநாயகி' (1981) ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது 13-வது வயதில், 'ஆனந்த்' (1986) திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் திரையுலகில் அறிமுகமானார். 'பஞ்சம வேதா' (1990) மற்றும் 'மைசூர் மல்லிகை' (1992) ஆகிய படங்களில் இவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்புக்காக, பிலிம்பேர் விருதுகளையும் கர்நாடக மாநிலத் திரைப்பட விருதுகளையும் தலா இரண்டு முறை வென்றுள்ளார்.

தமிழில் 'அன்னக்கிளி சொன்ன கதை' என்ற படத்தில் சத்யராஜின் ஜோடியாக அறிமுகமானார். அதன்பிறகு வசந்தகால பறவை, வசந்த கால மலர்கள், மவுனமொழி, சுகமான சுமைகள், தங்க கிளி, படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் கன்னடத்திற்கே சென்ற அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : திரைப்படமான முதல் சமூக தொடர்கதைபிளாஷ்பேக் : திரைப்படமான முதல் சமூக ... வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன் : கவுதம் ராம் கார்த்திக் ஓப்பன் டாக் வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap