அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி வசூல் நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'சிக்கந்தர்'. தமிழ் இயக்குனரான ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் படுதோல்வி அடைந்தது.
தற்போது 'மாத்ருபூமி' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் சல்மான். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படத்தை விஜய் நடித்த 'வாரிசு' படத்தை இயக்கிய தில் ராஜு தயாரிக்க, அந்தப் படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இது குறித்த அறிவிப்புகளை மூவருமே அடுத்தடுத்து நேற்று வெளியிட்டார்கள். ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
வம்சி பைடிபள்ளி குடும்பப் பாங்கான படங்களை எடுத்து பெயர் வாங்கியவர். சல்மான் கான் நடிக்க உள்ள இந்தப் படம் குடும்பம் பிளஸ் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்கிறார்கள்.
தென்னிந்திய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிப்பதை விரும்புபவர் சல்மான் கான். அவர்கள் சில சமயங்களில் தோல்விகளைக் கொடுத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து அடுத்து படத்திலும் நடிக்க உள்ளார்.