Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன் : கவுதம் ராம் கார்த்திக் ஓப்பன் டாக்

08 ஏப், 2026 - 03:49 IST
எழுத்தின் அளவு:
I-cry-when-I-feel-tired-in-life-Gautham-Ram-Karthik-Open-Talk
Advertisement

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக் , மஞ்சு வாரியார் நடிப்பில் உருவாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் படம் ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸாகிறது. கவுதம் ராம் கார்த்திக் நடித்த பேட்டியில் கூறியது : இப்பொழுது மிஸ்டர் எக்ஸ், ரூட் லெகசி , பிளடி பாலிடிக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில் மிஸ்டர் எக்ஸ் பக்கா ஆக் ஷன் படம், இந்த படத்திற்கான ஆக் ஷன் காட்சியில் எனக்கு அடிபட்டது. இந்த கேரக்டர் நெகட்டிவ் மாதிரி தெரியும், பாசிட்டிவ் ஆகவும் இருக்கும் அது ரசிகர்கள் பார்வையை பொறுத்தது.

இதில் ஆர்யா, சரத்குமார் உள்ளிட்ட அனைவருடன் நடித்து விட்டேன். ஆனால் மஞ்சுவாரியாருடன் மட்டும் எனக்கு சீன் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. இந்த படம் அளவுக்கு உடல் அளவில் வேறு எந்த படத்திற்கும் கஷ்டப்படவில்லை. ஆக் ஷன் காட்சிகள் அந்த அளவுக்கு பக்காவா இருக்கும். சென்னை தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்தது

கவுதம் என்ற என் பெயருடன் தாத்தா முத்துராமனில் இருந்து ராம், அப்பா கார்த்திக் சேர்த்து கவுதம் ராம் கார்த்திக் என மாற்றி வைத்துள்ளேன். ரொமான்ஸ் காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது, விரைவில் நடக்கலாம். தாத்தா முத்துராமனை ஏஐ கேரக்டரில் இணைந்து நடிக்க ஆர்வமில்லை. ஏதாவது தவறாக வந்து விடக்கூடாது என பயம் இருக்கிறது.

அப்பா நடித்ததில் கோகுலத்தில் சீதை, உள்ளத்தை அளித்த தா, சோலைக்குயில் உள்ளிட்ட படங்கள் பிடிக்கும். என் மனைவி மஞ்சிமா மோகன் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். கதை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவரிடம் கேட்டு தான் முடிவு எடுக்கிறேன். வாழ்க்கையில் சில விஷயங்களில் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் அழுவேன். அப்போது என்னுடன் இருப்பவர்கள் என் மனைவி, என்னை தேடுவார்கள், பின் வழக்கம்போல் உற்சாகமாகி விடுவேன். நீண்ட டிராவல் அதுவும் காரில் புதுச்சேரி வரை செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : தமிழில் தாக்குப்பிடிக்க முடியாத சுதா ராணிபிளாஷ்பேக் : தமிழில் ... 'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் வெளியானது! 'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

09 ஏப், 2026 - 04:04 Report Abuse
மணி கோபுரத்தில் சீதையா? பாஸு, அது கோகுலத்தில் சீதை...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap