டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்து பாராட்டை பெற்ற நடிகர் ஜெயம் ரவி, கடந்த சில நாட்களாக ‛சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் வலம் வருகிறார். இதற்கான காரணம் மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து கூறியதாவது: 'பொன்னியின் செல்வன் 2' ம் பாகத்துக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. என் நடிப்புக்கும் பாராட்டுகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அடுத்தும் இது போன்ற 'மல்டி ஸ்டார்' படங்களில் நடிக்க வேண்டுமெனில் அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். மணிரத்னம் போன்ற இயக்குநர் என்றால் அது சாத்தியமாக இருக்கும்.
நான் இயக்குநர் மணிரத்னத்திடம் அவ்வப்போது 'ஒன்லைனர்' சொல்வேன். அதைக் கேட்ட அவர், 'நீ எழுதலாம்' என்றார். அவர் சொன்ன பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் கார்த்தியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். நான் நடித்துள்ள 'இறைவன்' படம் முடிந்துவிட்டது. அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்போது 'சைரன்' படத்தில் நடித்து வருகிறேன். அதற்காகத்தான் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக். அதன் திரைக்கதை புதுவிதமாக இருக்கும். அடுத்து புதிய இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அது கொஞ்சம் பேன்டஸி படம். இவ்வாறு அவர் கூறினார்.




