ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்., 28ல் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ஜெயம் ரவி இப்போது சைரன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக புதுமுக இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஜீனி என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தபடத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை கிரித்தி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.