ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி, பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டவர் திருமணத்திற்கு பிறகு பிரியங்கா உபேந்திரா என்ற பெயரில் பல படங்களில் நடித்தார். இவர் நடிக்கும் 50வது படம் 'டிடெக்டிவ் தீக்ஷனா'. இந்த படத்தை த்ரிவிக்ரம் ரகு இயக்குகிறார்.
பிரியங்கா உபேந்திரா கூறியதாவது: எனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். பிறகு எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அந்த நேரத்தில் நான் என் நடிப்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. அப்படியே நடிக்க வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவ்வளவு சுலபமல்ல.
பெண்களை முதன்மைபடுத்தி வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது. எனக்கு நிறைய திகில் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் தொடர்ந்து திகில் படம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். தற்போது நடித்து வரும் டிடெக்டிவ் தீக்ஷனா எனது 50வது படம். ஒரு ஸ்கிரிப்டைக் கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
இந்த படத்தின் கதையை இயக்குனர் ரகு சொன்னபொழுது இதுவரை யாரும் செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது. எனவே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த கதாபாத்திரம் சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது. இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும். குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை டிடெக்டிவ் தீக்ஷனாவில் பார்க்கலாம். பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்தப்படம் சொல்கிறது. இது நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை தரும்.
'டிடெக்டிவ் தீக்ஷனா' ஒரு மிடுக்கான ஆக்ஷன் எண்டர்டெய்னர் பார்வையாளர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் .இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வணிகமாகவும் இந்த படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறோம். கன்னடம் , தெலுங்கு, இந்தி, தமிழ், பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.