நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக்லைப் என்ற படம் ஜூன் ஐந்தாம் தேதி திரைக்கு வரப்போகிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவருமே ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தக்லைப் படத்தில் இடம்பெற்ற கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு ஆகியோருடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துரையாடல் போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது சிம்புவிடத்தில், நீங்கள் நடிக்கவிருந்த ஐம்பதாவது படத்தின் தயாரிப்பில் இருந்து கமல்ஹாசன் விலக, இப்போது நீங்களே தயாரிப்பதற்கு காரணம் என்ன? என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவரிடத்தில் கேட்கிறார்.
அதற்கு சிம்பு பதில் கொடுப்பதற்கு முன்பே கமல்ஹாசன் குறுக்கிட்டு, தக்லைப் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரது ஐம்பதாவது படத்தின் தயாரிப்பை நாங்கள் நிறுத்தினோம். அந்த படத்தை எடுத்திருந்தால் தக்லைப் படத்தில் சிம்புவால் நடித்திருக்க முடியாது. அந்த வகையில், நாங்கள் சிம்புவை தியாகம் செய்தோம் என்று கூறுகிறார் கமல்.
அதையடுத்து இயக்குனர் கே.ஸ். ரவிக்குமார் உங்களது ஐம்பதாவது படத்தில் திருநங்கை வேடத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டேன். ஏற்கனவே இதே மாதிரி வேடத்தில் முன்பு சிவாஜி சார் நடித்திருந்தார். அதன் பிறகு கமல் சார், அஜித் போன்றவர்கள் நடித்தார்கள் என்று கூறுகிறார். அதற்கு சிம்பு பதில் அளிக்கையில், இந்த படத்திலும் திருநங்கை வேடம் இருக்கிறது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பதால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது முந்தைய படங்களிலிருந்து ஒரு வித்தியாசமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று பதில் கொடுக்கிறார் சிம்பு.