சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
2009ம் ஆண்டு வெளியான 'குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்' படத்தில் நடித்தவர் தனன்யா. இதில் சேரனின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் கதை நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு தனன்யா 'வெயிலோடு விளையாடு' என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
டாக்டராக படித்துக் கொண்டிருந்த தனன்யா படிப்பை தொடர சென்று விட்டார். படித்து முடித்து டாக்டராகிவிட்ட தனன்யா அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் தற்போது தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தி உள்ளார். கணவரின் அனுமதியோடு மீண்டும் தனன்யா நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயின் என்று இல்லாமல் மற்ற கேரக்டர்களில் அவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.