விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

சமந்தா கதையின் நாயகியாக நடித்து வெளியான யசோதா படம் வெற்றி பெற்றதை அடுத்து வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி மீண்டும் அவர் கதாநாயகியாக நடித்துள்ள இன்னொரு படமான சாகுந்தலம் திரைக்கு வருகிறது. புராண கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் சமந்தாவுடன் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் உயர்ரக கற்கள் பதிக்கப்பட்ட 30 கிலோ எடை கொண்ட ஒரு புடவையை அணிந்து ஒரு வார காலம் சமந்தா நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோன்று 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்தும் இந்த படத்தில் சமந்தா நடித்துள்ளாராம். அப்படி தங்க, வைர நகைகள் அணிந்து புராண கால கெட்டப்பில் சமந்தா நடித்துள்ள புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.