2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. அதையடுத்து ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான 96 என்ற படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் கார்த்தி. இந்த படத்திற்கு ஜல்லிக்கட்டு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படமும் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையில் சூர்யா நடிக்க இருக்கும் நிலையில் தற்போது கார்த்தியும் அதே ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட இன்னொரு கதையில் நடிக்கப் போகிறார். இந்த படம் வாடிவாசலுக்கு முன்பே திரைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.