நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்த படம் வருகிற 11-ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 500 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.
இப்படத்தில் நடித்துள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியர் துணிவு படம் குறித்து கூறுகையில், துணிவு படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. இதற்கு காரணம் அதிகப்படியான விளம்பரம் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடும். அதனால் ஒரு மிகப்பெரிய கற்பனைகளுடன் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். எனவே அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என்பதற்காகவே துணிவு படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை. அதோடு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு துணிவு படம் 100 சதவிகிதம் திருப்தியை கொடுக்கும் என்றும் மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.