ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் விஜய்யை வைத்து அவரின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இதில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், , ‛‛விஜய் 67 வது படத்தில் நடிப்பதற்கு சஞ்சய் தத் மிகவும் ஆர்வமாக உள்ளார். அதோடு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன் வேடத்திற்கு சஞ்சய் தத்தால் மட்டுமே சிறப்பான பர்பாமென்ஸை கொடுக்க முடியும். அந்த அளவுக்கு அது ஒரு பவர்புல்லான கதாபாத்திரம் என்று தெரிவித்துள்ளார்.
கேஜிஎப் 2 படத்தில் ஏற்கனவே அவர் நடித்த ஆதீரா என்ற வில்லன் வேடத்துக்கு இணையாக இந்த விஜய் 67வது படத்திலும் சஞ்சய் தத்தின் வேடம் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் 67 வது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறதாம். அங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சண்டைக் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




