நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த் 70 வயதுக்கு பிறகும் ஹீரோவாக நடித்து விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கே டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அவரது வசூல் சாதனையை எந்த நடிகர்களும் முறியடிக்கவில்லை என்ற திரையுலகினரின் கருத்துக்களும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசைவிழா நடைபெற்றபோது, நான் நடித்த சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினேன் என அந்த மேடையில் தான் முன்பு பேசியதை நினைவுப்படுத்தினார் சரத்குமார். அவரது அந்த பேச்சை தொடர்ந்து, ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்ற கருத்துக்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சரத்குமார் வாரிசு விழா மேடையில் பேசியதையும் பலரும் சுட்டிக்காட்டினார்கள் .
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யின் வளர்ச்சியை பார்த்து அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நான் சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவில் கூறியிருந்தேன். அதைத்தான் வாரிசு படத்தின் இசை விழாவிலும் சொன்னேன். ஆனால் ரஜினிகாந்த் தற்போதைய சூப்பர் ஸ்டார் இல்லை, விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று நான் சொல்லவில்லை. அஜித் குமார் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் நான் சொல்லவில்லை. அதோடு அமிதாப்பச்சன் சூப்பர் ஸ்டார் தான். ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார் தான். அந்த வகையில் அவர்தான் சூப்பர் ஸ்டார், இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொரு நடிகர்களுமே சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தான் என்ற கோணத்தில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.