திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஹைலைட்டான அம்சமாக இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயநிதியின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்திற்கான பின்னணி இசை பணிகளை துவங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், “என்னுடைய நீண்ட நாட்கள் காத்திருப்பு கிட்டதட்ட தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. மாமன்னன் மூலமாகத்தான் இது நிகழ்ந்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்த கூட்டணி சாத்தியமானதற்கு உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.