விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி | வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் |
தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்பத்தில் மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, ஒருகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையானார் ஹனிரோஸ். திடீரென அவரது திரையுலக பயணத்தில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டாலும் தற்போது அதிரடியாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ள ஹனிரோஸ் சமீபத்தில் சுந்தர்சி ஜோடியாக வெளியான பட்டாம்பூச்சி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது புலி முருகன் டைரக்டர் வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஹனிரோஸ். சமீபத்தில் வெளியான இந்த படத்தில் பல நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கும் சவாலான லெஸ்பியன் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்துள்ளார் ஹனிரோஸ். அவர் மட்டுமல்ல தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சுவும் இதே போன்ற கதாபாத்திரத்தில் ஹனிரோஸுக்கு இணையாக நடித்திருந்தார். இந்தநிலையில் படம் பார்த்த பலரும் ஹனிரோஸ் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்த படத்தில் நடித்தது குறித்து ஹனிரோஸ் கூறும்போது, “இயக்குனர் வைசாக் என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்காக அவருக்கு தான் என் முதல் நன்றியை தெரிவிக்க வேண்டும். இதுவரை மோகன்லாலுடன் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில்தான் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக முதன்முறையாக நடித்துள்ளேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இது போன்ற வித்தியாசமான, நடிப்புக்கு தீனி போடுகின்ற சவாலான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.