டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதுகள் உலக அளவில் சிறந்த திரைப்பட விருதுகளாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் போட்டியில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பாக குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்து அனுப்பப்படுகிறது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வாகாதது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் விருதுக்கான பொதுப் பிரிவுகளிலும் வெளிநாட்டுப் படங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியும். அந்த விதத்தில் தற்போது சில பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் கலந்து கொள்கிறது.
“சிறந்த மோஷன் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்” ஆகிய பிரிவுகளில் இப்படம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




