‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி |
கடுகு, கோலிசோடா 2, நேத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறவர். தற்போது யார் இவர்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வரும் சுபிக்ஷா, ‛சூரகன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தேர்ட் ஐ நிறுவனத்தின் சார்பாக கார்த்திகேயன் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் இயக்குகிறார். பாண்டியராஜன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவு செய்கிறார், அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் படம். சுபிக்ஷாவுக்கு சூரகன் கை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.