Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத்

16 ஆக, 2022 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Anirudh-enters-Malayalam-in-Nivin-Pauly-movie

தமிழ் திரை உலகில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் தனுஷ் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத், விரைவில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனுசுடன் கைகோர்த்துள்ளார்.

இதுதவிர தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், ஹிந்தியில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் அதை மறுத்து விடுகிறார். இந்த நிலையில் முதன்முதலாக நிவின்பாலி நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதன் மூலமாக, அனிருத் மலையாள திரையுலகில் நுழைகிறார் என ஒரு தகவல் மலையாள வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. மம்முட்டி நடித்த தி கிரேட் பாதர் என்கிற படத்தை இயக்கிய ஹனீப் அதேனி என்பவர் நிவின்பாலியை வைத்து இயக்க உள்ள புதிய படத்தில் தான் அனிருத் இசையமைக்க உள்ளாராம். ஏற்கனவே நிவின்பாலி நடித்த மைக்கேல் என்கிற படத்தை ஹனீப் அதேனி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ்விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் ... 75வது நாளில் 'விக்ரம்' 75வது நாளில் 'விக்ரம்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)