ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ! | காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தின் மூலம், தான் அறிமுகமான காலகட்டத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சுதா கொங்கர இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தபின் தென்னிந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார்.
இந்த படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரத்திற்கு அப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த மாதம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அந்த படமும் வெற்றி பட வரிசையில் இணைந்த நிலையில், தற்போது தேசிய விருதும் இவரை தேடி வந்துள்ளதால் முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் தற்போது அபர்ணாவின் மீது வெளிச்சம் விழுந்துள்ள நிலையில், அதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், இவர் மலையாளத்தில் நடித்து வந்த சுந்தரி கார்டன்ஸ் என்கிற திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகரான நீரஜ் மாதவ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.