தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. புதிய பாதை படத்தில் நடித்த போது பார்த்திபனுடன் காதல் உருவாகி அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரை பிரிந்தார். குணச்சித்ர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் சீதா, சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த பிரதர் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இரண்டரை பவுன் நகை காணாமல் போய்விட்டதாக சென்னையில் உள்ள விருகம்பாக்கம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் சீதாவின் வீட்டில் வேலை செய்யும் நபர்களிடத்தில் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.