'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குன் வேணு எல்டண்டி. 'பலகம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் அடுத்து 'எல்லம்மா' என்ற படத்தை இயக்க இருந்தார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை. எல்லம்மா என்பதே ஹீரோயின் பெயர்தான். இந்த படத்தில் நடிக்க வேணு, நடிகர் நானியை அணுகியபோது கதை நன்றாக இருக்கிறது. பவர்புல்லான ஹீரோயின் பட்ஜெட் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் எல்லம்மா படத்தில் நடிக்க நானிக்கு பதில் நிதின் ஒப்பந்தம் செய்யப்பட்டடார். நாயகிக்கு ஒரே சாய்ஸ் சாய்பல்லவி தான் என்று முடிவு செய்து அவரை அணுகியபோது கதை கேட்டு வியந்த சாய்பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.
தற்போது அவர் ராமாயணம் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அதற்கு இடையில் எல்லம்மா என்கிற ஒரு கோபமான பெண்ணின் கேரக்டரில் நடித்தால் சீதா கேரக்டரின் அமைதி இருக்காது என்பதை உணர்ந்த சாய்பல்லவி எல்லம்மா படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
சாய்பல்லவி சீதையாக நடிப்பதால் அவர் நடிக்க மறுத்துள்ள 3வது படம் இது. தற்போது எல்லம்மாவாக நடிக்க வேறு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.