அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது இயக்குனர் நாக் வம்சி இயக்கத்தில் பிராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடித்து முடித்துள்ள ஆதிபுருஷ், சலார் போன்ற திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து இப்போது ஒரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளராம் பிரபாஸ். சமீபத்தில் பிரபாஸை சந்தித்து ஹனு ராகவபுடி கதை கூறியுள்ளாராம். அந்த கதை பிடித்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் பிரபாஸ். இந்த படம் எப்போது துவங்கும் என்றெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், இப்படம் காதல் கதை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.