கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து அவரது 68வது படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலேனி இயக்குகிறார் என்றும் தகவல் பரவியது. ஆனால், திடீர் திருப்பமாக விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்ற தவகல் வெளியானது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இவர்கள் கூட்டணி உறுதி தான் என்கிறார்கள். இப்படத்தை ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்திலே வெளியாகும் என்று கூறப்படுகிறது. பொதுவாக விஜய் ஒரு படத்தை முடித்த பின்னரே தனது அடுத்தப்பட வேலையில் கவனம் செலுத்துவார். அந்தவகையில் லியோ படப்பிடிப்பு முடிந்த பின்பு தான் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகும் என்றாலும் கூட இந்தவாரத்தில் இவர்கள் கூட்டணியை உறுதி செய்யும் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.